தமிழர் பகுதியில் திடீரென வெடித்து சிதறிய எரிவாயு அடுப்பு (VIDEO)
வவுனியா, காத்தார்,சின்னக்குளம் பகுதியில் வீடு ஒன்றில் சமைத்துக்கொண்டு இருந்த போது எரிவாயு அடுப்பு வெடித்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, கத்தார் சின்னக்குளம், லக்சபானா வீதியில் உள்ள வீடு ஒன்றில் பெண் ஒருவர் சமைத்துக்கொண்டிருந்த போது இன்று திடீரென எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.
இதனையடுத்து குறித்த பெண் எரிவாயு சிலிண்டரை பாதுகாப்பாக அகற்றி மேலதிக அனர்த்தம் ஏற்படுவதை தடுத்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து, வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.பீ.மானாவடு தலைமையிவ் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் தடயவியல் பொலிஸாரின் உதவியுடன் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





