கொட்டகலையில் வெடித்து சிதறிய எரிவாயு அடுப்பு (VIDEO)
நாடளாவிய ரீதியில் எரிவாயு அடுப்புக்கள் அண்மைக்காலமாக வெடிக்கும் சம்பவங்கள் பல பதிவாகி வருகின்றன. இது தொடர்பில் ஆராயப்பட்டும் வருகின்றது.
இந்நிலையில், வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இரண்டு நாட்களில் நான்கு எரிவாயு அடுப்பு வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதியில் இரண்டு எரிவாயு அடுப்புகள், ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை பகுதியில் தலா ஒரு எரிவாயு அடுப்புகள் என நான்கு எரிவாயு அடுப்புகள் இதுவரை வெடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த வீட்டில் இருந்தவர்கள் எவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், எரிவாயு அடுப்புக்கள் மாத்திரமே வெடித்துள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
கொட்டகலை
திம்புல்ல பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை டிரேட்டன் கே.ஓ. பிரிவில் பழைய வீடமைப்பு திட்டத்தில் உள்ள வீடொன்றில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியுள்ளதாக திம்புல்ல பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (12) திகதி அதிகாலை 5.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த வெடிப்பு சம்பம் தொடர்பாக ஆராய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
