யாழில் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் மீது வாள்வெட்டு (video)
யாழில் கியூ.ஆர். குறியீடு இல்லாமல் பெட்ரோல் வழங்க மறுத்த எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் மீது வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று (16.02.2023) இரவு நடந்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கியூ.ஆர். குறியீடு இல்லாமல் பெட்ரோல் வழங்குமாறு வற்புறுத்தியுள்ளனர்.
வாள்வெட்டு பிராயோகம்
இதன்போது பெட்ரோல் வழங்க மறுத்த ஊழியர் மீது வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள் வந்த இருவரே இந்த வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதி
சம்பவத்தில் காயமடைந்த ஊழியர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
