சமையல் எரிவாயு தட்டுப்பாடு: திருகோணமலையில் நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்(Photos)
சமையல் எரிவாயுவைப் பெற்றுக் கொள்வதற்கு இன்று காலை 10 மணி முதல் பி.ப 2 மணிவரை திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேசத்தில் பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் பொது மக்கள் நீண்ட வரிசையில் காத்துக் கொண்டிருந்ததாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அப்பகுதி பொதுமக்களுக்கு சமையல் எரிவாயு வழங்கப்பட இருப்பதாக கிடைக்கப் பெற்ற தகவல்களை அடுத்து கந்தளாய் பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையால் செல்லும் வீதி ஓரத்தில் சிலிண்டர்களை வரிசையாக அடுக்கி வைத்து பிற்பகல் 2.00 மணிவரையும் மக்கள் காத்துக் கொண்டிருந்துள்ளனர்.
சமையல் எரிவாயு வழங்கப்படுவதற்குரிய ஏற்பாட்டை கந்தளாய் வர்த்தக சம்மேளனத்தினர் செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
சமையல் எரிவாயுவை பெற்றுக் கொள்வதற்கு வருகை தந்த இரண்டு சிறுவர்கள்
(சகோதரர்கள்) ஏமாற்றத்துடன் சிலிண்டரை தூக்க இயலாது, ஆளுக்கொரு பக்கமாக நீண்ட
நேரம் தூக்கிக் கொண்டு சென்றதை எம்மால் காணக் கூடியதாக இருந்தது என எமது செய்தியாளர் தெரவித்துள்ளார்.








தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சகோதரி பவதாரணி பாடலை பாடிய போட்டியாளர், எமோஷ்னல் ஆன யுவன், வெங்கட் பிரபு.. சூப்பர் சிங்கர் 11 புரொமோ Cineulagam

மனோஜை துடைப்பக்கட்டையால் ரவுண்டு கட்டி அடித்த பெண்கள், அப்படி என்ன செய்தார்.. சிறகடிக்க ஆசை கலகலப்பு புரொமோ Cineulagam
