யாழில் எரிவாயு கொள்கலன் விநியோகிக்கப்படும் முறை: வெளியானது அறிவிப்பு

Jaffna Sri Lanka Economic Crisis Litro Gas Sri Lanka Food Crisis Sri Lanka Fuel Crisis
By Mayuri May 29, 2022 04:12 AM GMT
Report

எரிவாயு சிலிண்டர் விநியோக பொறிமுறை தொடர்பான நடைமுறைகள் பற்றி யாழ். மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

தற்போது நாட்டில் நிலவும் அசாதாரண நிலைமையில் மக்களது கேள்வியை விட குறைவான எரிவாயு கொள்கலன்களே கிடைக்கப் பெறுவதனால் அவற்றை சீரான முறையில் மற்றும் நியாயமான விலையில் மக்கள் பெற ஏதுவான பொறிமுறை ஊடாக எரிவாயு சிலிண்டர்களை எதிர்வரும் காலங்களில் பகிர்ந்தளிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களுக்கு எரிவாயு இல்லை! லிட்ரோவின் புதிய அறிவிப்பு 

வீட்டுப்பாவனைக்கு விநியோகிக்கும் முறை

கிராம அலுவலர் பிரிவுகளுக்கென ஒதுக்கப்பட்ட விநியோகத்தர்களிடம், உரிய கிராம மக்கள் தமது எரிவாயு சிலிண்டருக்கான பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.

யாழில் எரிவாயு கொள்கலன் விநியோகிக்கப்படும் முறை: வெளியானது அறிவிப்பு | Gas Cylinder Distribution In Jaffna

விநியோகத்தர்களும் மேற்படி விபரங்கள் தொடர்பான பதிவேடு ஒன்றினை பேணுதல் வேண்டும். விநியோகத்தர்களிடம், ஒரு வீட்டுக்கு ஒரு எரிவாயு கொள்கலன் என்ற முன்னுரிமை அடிப்படையில் பதிவு மேற்கொள்ளப்படுவதனை கிராம அலுவலர்கள் உறுதிப்படுத்தல் வேண்டும்.

விநியோகத்தர்களுக்கு எரிவாயு கொள்கலன்கள் கிடைக்கப்பெற்றதும் பதிவு அடிப்படையில் அவர்களுக்கான விநியோகம் நடைபெறும்.

குறித்த நேரத்தில் பதிவு மேற்கொண்டோர் சமூகமளிக்காவிடின் பதிவு அடிப்படையில் அடுத்துள்ள பயனாளிக்கு விநியோகிக்கப்படும்.

விநியோகிக்கப்பட்ட விபரம் பிரதேச செயலக மேற்பார்வையில் குடும்ப பங்கீட்டு அட்டையில் திகதி குறிப்பிடப்பட்டு பதிவு செய்தல் கட்டாயமானது.

யாழில் எரிவாயு கொள்கலன் விநியோகிக்கப்படும் முறை: வெளியானது அறிவிப்பு | Gas Cylinder Distribution In Jaffna

எரிவாயு கொள்கலன் பெறவருபவர் உரிய கிராம அலுவலர் பிரிவு பங்கீட்டு அட்டை, தேசிய அடையாள அட்டையுடன் பங்கீட்டு அட்டையில் பெயருடைய அங்கத்தவர் ஒருவராக இருத்தல் கட்டாயமானது.

விநியோகத்தர்களுக்கு விநியோகிக்கும் முறை

தமக்கு கிடைக்கப்பெறும் எரிவாயு கொள்லகன்களின் எண்ணிக்கை அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு லிட்ரோ பிராந்திய முகாமையாளரால் வழங்கப்படும்.

கிடைக்கப்பெற்ற எரிவாயு கொள்கலன்களது எண்ணிக்கைக்கு அமைவாக விநியோகத்தர்களுக்கு விநியோகிக்க வேண்டிய கொள்கலன்களது எண்ணிக்கை பிரதேச செயலாளர்களால் எஸ்விஎம் நிறுவனத்திற்கு அறிவிக்கப்படும்.

யாழில் எரிவாயு கொள்கலன் விநியோகிக்கப்படும் முறை: வெளியானது அறிவிப்பு | Gas Cylinder Distribution In Jaffna

அதன் அடிப்படையில் எஸ்விஎம் நிறுவனத்தினர் விநியோகத்தர்களுக்கான எரிவாயு கொள்கலன்களை விநியோகிப்பர்.

ஏனைய தேவைகளுக்கு

கைத்தொழில் நிலையங்கள், உணவுச்சாலைகள், வைத்தியசாலைகள் மற்றும் நலன்புரி சேவை நிறுவனங்கள் (சிறுவர் / முதியோர் இல்லம்) ஆகியவற்றுக்கு வழமைபோல் விநியோகத்தர்களால் நேரடியாக விநியோகிக்கப்படும். 

10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US