விடுதலை புலிகளின் தலைவர் செய்யாததை செய்த எரிவாயு நிறுவனங்கள்! தென்னிலங்கை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தகவல்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் செய்யாத ஒன்றை இரண்டு எரிவாயு நிறுவனங்கள் செய்துள்ளதாக தென்னிலங்கையில் இருந்து ஒளிபரப்பாகும் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் அண்மைய நாட்களாக எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் அதிகளவில் பதிவாகியுள்ள நிலையில், அது குறித்த சர்ச்சைகளும் தற்போது தலைதூக்கியுள்ளன.
எரிவாயு கொள்கலன்கள் மற்றும் அடுப்புக்கள் வெடிப்பது தொடர்பில் கொழும்பின் பிரபல தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் இந்த கருத்து பகிரப்பட்டுள்ளது.
“முப்பது வருட போரின் போது விடுதலைப் புலிகளின் தலைவர் ஆங்காங்கே குண்டுகளை வெடிக்க வைத்தார். ஆனால் எரிவாயு நிறுவனங்கள் 2700 ரூபா பணத்தையும் பெற்றுக்கொண்டு ஒவ்வெரு வீடுகளுக்கும் குண்டுகளை அனுப்பி வைத்துள்ளது.
பிரபாகரன் செய்யாத ஒன்றைத்தான் இந்த இரண்டு நிறுவனங்களும் செய்துள்ளதாக” அந்த நிகழ்ச்சியில் கருத்து பரிமாறப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் அண்மைய காலமாக எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் நூற்றுக்கணக்கில் பதிவாகியிருந்தது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், எரிவாயு சிலிண்டரின் கலவையில் ஏற்பட்ட மாற்றமே நாட்டில பதிவான வெடிப்பு சம்பவங்களுக்கு காரணம் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண ஒப்புக்கொண்டிருந்தார்.
இது தனது தனிப்பட்ட கருத்து எனவும் அவர் கூறியுள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய அவர் இதனை தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 22 மணி நேரம் முன்

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri
