எரிவாயு நிறுவனங்கள் நீதிமன்றுக்கு தெரிவித்த தகவல்
நீதிமன்ற உத்தரவுகளுக்கு இணங்க திரவ பெட்ரோலிய வாயுவை (LPG) விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை, லிற்றோ மற்றும் லாப் எரிவாயு நிறுவனங்கள் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளன.
பொதுநலன் வழக்கு செயற்பாட்டாளர் நாகானந்த கொடிதுவக்குவினால் தாக்கல் செய்யப்பட்ட இது தொடர்பான மனு, நீதியரசர்கள் ருவான் பெர்னாண்டோ மற்றும் சம்பத் விஜயரத்ன ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இது அறிவிக்கப்பட்டது.
சந்தையில் விநியோகிக்கப்பட்ட அபாயகரமான எரிவாயு கொள்கலன்களை மீளப் பெறுவதற்கும், மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவைக் கடைப்பிடிப்பதற்கும் எரிவாயு நிறுவனங்களும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையும் தவறிவிட்டதாக கொடிதுவக்கு தனது பிரேரணையில் குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்தநிலையில் நாகானந்தாவின் மனு ஜனவரி 26ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.



