இலங்கையில் மேலும் நான்கு எரிவாயு வெடிப்பு சம்பவங்கள்
இலங்கையில் இன்றும் நான்கு எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
பாதுக்க, ஹங்வெல்ல, ஹட்டன் மற்றும் ஜா-எல ஆகிய பகுதிகளில் வாயு கசிவால் மேலும் நான்கு வெடிப்புச் சம்பவங்கள் ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
தித்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்டிற்கு கொண்டு வந்த எரிவாயு கொள்கலனுடன் எரிவாயு அடுப்பு இணைக்கப்பட்டு சிறிது நேரத்தில் வெடித்து சிதறியதாக ஹங்வெல்ல பொலிஸில் இன்று காலை முறைப்பாடு செய்துள்ளார்.
விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
பாதுக்க, அருக்வத்தையில் உள்ள உணவகம் ஒன்றில் எரிவாயு அடுப்புடன் இணைக்கப்பட்ட எரிவாயு குழாய் வெடித்துள்ளது.
எரிவாயு அடுப்பு இயங்காத நிலையில் இந்த வெடிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹட்டன் மல்லியப்பு பகுதியில் உள்ள உணவகத்திலும் வாயு வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை உணவை சமைத்துக் கொண்டிருந்த போது, எரிவாயு குழாய் திடீரென தீப்பற்றியதாக உணவகத்தின் உரிமையாளர் தெரிவித்தார்.
இந்த விபத்தில் உணவகம் சேதமடைந்தது.
இதேவேளை, நேற்று இரவு விஷவாயு கசிவு காரணமாக ஜா-எல துடெல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வெடிப்புச் சம்பவம் ஒன்றும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அடுப்பை அணைத்த உடனேயே வெடி விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
