வெள்ளைப்பூண்டு விவகாரம்! இரு வர்த்தகர்களுக்கு விளக்கமறியல்
லங்கா சதொசவுக்கு சொந்தமான 54,000 கிலோகிராம் வெள்ளைப் பூண்டுகளைக் கொண்ட இரண்டு கொள்கலன்களை, அகற்ற உதவியதாகக் கூறி கைது செய்யப்பட்ட, இரண்டு வர்த்தகர்களை அக்டோபர் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வெலிசர நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
இந்த சம்பவம் தொடர்பில், எஸ்.கே. டிரேடர்ஸின் ஒரே உரிமையாளரான வேலாயுதம் சிறீதரன் மற்றும் அவரது மாமா சின்னையா கமலக்குமார் ஆகிய இருவரும், சந்தேகத்திற்கு இடமின்றி உதவி செய்தல், குற்றத்தை மீறுதல், தகவல்களை மறைத்தல் மற்றும் சட்டவிரோதமாக பொருட்களை விடுவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், விசாரணைகள் தொடர்பான தொலைபேசி உரையாடல் விவரங்களை வழங்குமாறு தொலைபேசி சேவை வழங்குநர்களுக்கு, நீதிவான், ஹெஷாந்த டி மெல் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சதொச நிதி பிரிவின் துணை பொது மேலாளர் சுசில் பெரேராவுக்கு ஏற்கனவே பிணை வழங்கப்பட்டுள்ளதாக பிரதிவாதிகளின் சட்டத்தரணி மன்றில் சுட்டிக்காட்டினார்.
உண்மையான குற்றவாளிகளைப் பாதுகாக்கும் நோக்கில் தனது வாடிக்கையாளர்கள் இருவர் மீதும் பொய்யான வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதற்கிடையில், பேலியகொட காவல்துறையின் சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் இருந்து இந்த விசாரணைய, குற்றப்புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்குமாறு, காவல்துறை அதிபர் உத்தரவிட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, பி அறிக்கையின்படி, என்.எஸ். எண்டர்பிரைசஸ் தீபக் குமார் கிருஷ்ணகுமார், என்பவரே, லங்கா சதொசாவில் இருந்து வெள்ளைப்பூண்டுகளை கொள்வனவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 37 நிமிடங்கள் முன்

உறுதியான பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் லிஸ்ட்! வாட்டர் மெலன் ஸ்டார் முதல் விக்கல்ஸ் விக்ரம் வரை.. Cineulagam

பிரித்தானியாவின் 23 பகுதிகளை குறிவைத்திருக்கும் ரஷ்யா... வெளியான வரைபடத்தால் அதிர்ச்சி News Lankasri

காரை நிறுத்திய பொலிசாரிடம் மனைவிக்கு பிரசவ வலி என்று கூறிய பிரித்தானியர்: தெரியவந்த உண்மை News Lankasri

துபாயில் சிறையில் இருந்து விடுதலையான 19 வயது பிரித்தானிய இளைஞர்: லண்டன் சாலையில் சோகம் News Lankasri
