கிளிநொச்சியில் 47 கிலோ கஞ்சா மீட்பு:ஒருவர் கைது(Photos)
கிளிநொச்சியில் 47 கிலோ கஞ்சாவுடன் சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைவாக மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது.
இரகசிய தகவல்
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கனகாம்பிகைக்குளம் பகுதியில் உள்ள தனியாரின் வீட்டொன்றில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து நேற்று இரவு சோதனை மேற்கொண்ட பொலிஸார் 47 கிலோ கஞ்சாவை மீட்டுள்ளதுடன், சந்தேசத்தின் பேரில் 44 வயதுடைய ஒருவரை கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தொடந்தும் விசாரணை இடம்பெற்று வரும் நிலையில், சான்று பொருட்களையும், சந்தேக நபரையும் மன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் மாலை திருவிழா





பாட்டியை காணவில்லை, க்ரிஷ் அம்மாவை கண்டுபிடிக்க மீனா சொன்ன விஷயம், சிக்கப்போகும் ரோஹினி... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
