விராட் கோஹ்லிக்கும்- கங்குலிக்கும் இடையில் மோதல்! கங்குலியின் பதில்! (Photos)
இந்திய கிரிக்கட் அணியின் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ள விராட் கோஹ்லிக்கும் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் சவ்ரவ் கங்குலிக்கும் இடையில் முரண்பாடுகள் தொடர்வதாக வெளியான தகவலை சவ்ரவ் கங்குலி மறுத்துள்ளார்.
உலக கிண்ண போட்டியின் பின்னர் 20க்கு20 போட்டிகளின் தலைவர் பதவியில் இருந்து விராட் கோலி விலகினார்.
அதைத் தொடர்ந்து ஒருநாள் போட்டியின் தலைவர் பதவியும் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது.
இதனிடையே 20க்கு 20 போட்டிகளின் தலைமையில் இருந்து விலக வேண்டாம் என்று விராட் கோலியிடம் கூறியதாக கங்குலி தெரிவித்திருந்தார்.
ஆனால் தம்மிடம் அப்படி யாரும் கூறவில்லை என்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றின்போது கோஹ்லி குறிப்பிட்டார்.
இந்நிலையில் இந்திய டெஸ்ட் போட்டி தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக விலகியமை தொடர்பில் விராட் கோஹ்லியிடம் விளக்கம் கோரப்படவுள்ளதாக வெளியான தகவலையும் கங்குலி மறுத்துள்ளார்.













அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 12 மணி நேரம் முன்

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
