மசாஜ் நிலையங்களுக்குள் புகுந்து கொள்ளையடித்த கும்பல்: சிக்கிய திருடர்கள்
கடவத்தை மற்றும் கிரிபத்கொட ஆகிய பிரதேசங்களில் மசாஜ் நிலையங்களுக்குள் புகுந்து கூரிய ஆயுதங்களால் தாக்கி பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற கும்பலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கிரிபத்கொடையில் உள்ள மசாஜ் நிலையமொன்றிற்குள் புகுந்த குழுவினர் அங்கிருந்த யுவதிகள் மற்றும் நபர்களை தாக்கியுள்ளனர்.
வாடிக்கையாளர் போன்று மசாஜ் நிலையத்திற்குள் நுழைந்த அவர்கள், அங்கிருந்த பணம், கைத்தொலைபேசிகள், தங்க ஆபரணங்கள் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
பொலிஸார் நடவடிக்கை
இதனையடுத்து, பொலிஸார் அப்பகுதியில் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்ட போது, குறித்த திட்டமிட்ட கொள்ளைக் கும்பலை சேர்ந்தோர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 06ஆம் திகதி கடவத்தையில் உள்ள மசாஜ் நிலையத்திலும் குறித்த கும்பல் கொள்ளையிட்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri
