பலப்படுத்தப்பட்டுள்ள மேன்முறையீட்டு நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்பு
மேன்முறையீட்டு நீதிமன்ற வளாகத்திற்குள் நுழையும் வழக்கறிஞர்கள் உட்பட அனைத்து நபர்களிடமும் முழுமையான சோதனைகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்பினை கடுமையாக பலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்து.
பொலிஸ் அதிகாரிகள், நீதிமன்ற அதிகாரிகள் மற்றும் கொழும்பு சட்ட சங்கத்தின் பிரதிநிதிகள் பங்கேற்ற சிறப்புக் கூட்டத்தின் போது இன்று (20) இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பாரிய பாதுகாப்பு குறைபாடு
நேற்று (19) புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் ஏற்பட்ட பாரிய பாதுகாப்பு குறைபாட்டை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் "கணேமுல்ல சஞ்சீவ", வழக்கறிஞர் வேடத்தில் நீதிமன்றத்திற்குள் நுழைந்த ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ராஜபக்ச குடும்பத்திற்கு நெருக்கமான நபர் குடும்பத்துடன் சுட்டுக்கொலை! விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
