கணேமுல்ல சஞ்சீவ கொலை விவகாரம்! பெண் தொடர்பில் அறிவித்தால் வெகுமதி
கணேமுல்ல சஞ்சீவ கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த பெண் சந்தேக நபரை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
குறித்த பெண் தொடர்பான தகவல்களை வழங்குபவர்களுக்கு விசேட வெகுமதி வழங்கப்படும் எனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
குறித்த பெண்ணை தெரியுமா..
கொழும்பு - புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் நேற்றையதினம் நடத்தப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப்பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்தநிலையில், இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்காரருக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த பெண் சந்தேக நபரை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
பெண் சந்தேகநபர் தொடர்பில் பொலிஸார் பல தகவல்களையும் வெளியிட்டுள்ளனர்.
பெயர்:- பிங்புரா தேவகே இஷாரா செவ்வந்தி
வயது: 25
தே.அ.இல :- 995892480V
முகவரி:- 243/01, நீர்கொழும்பு வீதி, ஜெயா மாவத்தை, கட்டுவெல்லேகம
மேற்குறித்த விபரங்களைக் கொண்ட பெண் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதன்படி, 071-8591727 மற்றும் 071-8591735 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாக சந்தேகநபர் தொடர்பான தகவல்களை வழங்க முடியும்.
இந்த சந்தேக நபர் குறித்து தகவல் வழங்குபவர்களுக்கு வெகுமதி வழங்குவதற்கு பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய முடிவு செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தகவல்களை வழங்குபவர்களின் ரகசியத்தன்மையைப் பாதுகாக்க இலங்கை பொலிஸாரினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
