கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களின் விளக்க மறியல் நீடிப்பு
பிரபல பாதாள உலக குழு உறுப்பினரான கணமுல்ல சஞ்சீவ படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர்களை எதிர்வரும் டிசம்பர் மாதம் 5ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது. குறித்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் அசங்க போதாரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் குறித்து கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்திற்கு விளக்கம் அளித்திருந்தனர்.
வேறும் ஓர் சம்பவத்துடன் தொடர்பில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள சுபுன் பிரதீப் குமார என்ற நபரே இந்த வழக்கின் 35ம் சந்தேக நபராக பெயரிடுவதற்கு நீதிமன்றிடம் அதிகாரிகள் அனுமதி கோரி இருந்தனர்.
இந்த கோரிக்கைக்கு நீதவான் அனுமதியை வழங்கியுள்ளார்.
சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இரண்டு சந்தேக நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் தொடர்ந்தும் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
வீட்டுக்கு போனதும் 2 நாள் இதை தான் செய்தேன்! பிக்பாஸ் டைட்டில் வின்னர் திவ்யா Exclusive LIVE Manithan
ரஞ்சியில் அர்ஜுன் டெண்டுல்கர் 4 ஓட்டங்களில் அவுட்: 6 விக்கெட்டுகளை அள்ளிய வீரர்..சுருண்ட கோவா News Lankasri