அரசாங்கம் எமக்கு எதனையும் வழங்கவில்லை
தேசிய மக்கள் அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தில் தமக்கு எதுவும் கிடைக்கவில்லை என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் விசனம் வெளியிட்டுள்ளது.
தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயசுந்தர இந்த அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டம் தொடர்பில் அவர் கருத்து வெளியிட்டுள்ளார். இந்த வரவு செலவு திட்ட சமர்ப்பிப்பு குறித்து தாம் வெட்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

அரசாங்கம் எப்பொழுதும் தனியார் பேருந்து போக்குவரத்துத்துறையை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்துவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு பெருந்தொகை பணத்தை கொடுத்து உதவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கம் மட்டுமன்றி கடந்த காலங்களில் ஆட்சி செய்த பல அரசாங்கங்களும் தனியார் பேருந்து போக்குவரத்து துறைக்கு உரிய முன்னுரிமை அளிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
தனியார் பேருந்து போக்குவரத்து துறை நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் குறிப்பிடத்தக்களவு பங்களிப்பினை வழங்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
அரசாங்கம் இலங்கை போக்குவரத்து சபைக்கு நாள் ஒன்றுக்கு பொதுமக்களின் 2 கோடி ரூபாய் பணத்தை செலவிடுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இந்த விடயத்தை மிகவும் பொறுப்புடன் தான் கூறுவதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.
அரசாங்கம் மக்களின் பணத்தை பயன்படுத்தி இவ்வாறு செய்வது ஏற்புடையதல்ல என கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.