இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரி கைது
இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டின் பேரில் கம்பஹா பொலிஸ் தலைமையகத்தின் குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டதாக இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஜா-எல, தண்டுகம பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து, இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருடப்பட்ட தங்க நகைகள் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருந்ததற்கும், முறைப்பாட்டை தொடர்ந்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படால் இருப்பதற்குமாக 300,000 ரூபாய் மற்றும் முக்கால்வாசி தங்கத்தை இலஞ்சமாக கேட்டதாக சந்தேக நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பொலிஸ் அதிகாரி
கேட்ட இலஞ்சத்தின் ஒரு பகுதியாக பொலிஸ் அதிகாரி ஏற்கனவே 250,000 ரூபாய் பெற்றுள்ளதாக புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.

நேற்று பிற்பகல் 3.10 மணியளவில் கம்பஹாவில் உள்ள தக்ஷிலா மகா வித்யாலயம் அருகே சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
மேலும் கைது செய்யப்பட்ட அதிகாரி கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று நிகழ்ந்த சோகம்: கொடூர தாக்குதலில் 80 வயது மூதாட்டி பலி News Lankasri
கடற்கொள்ளையில் ஈடுபடும் ட்ரம்ப் நிர்வாகம்... எண்ணெய் கப்பல் விவகாரத்தில் ரஷ்யா கடும் தாக்கு News Lankasri