கம்பஹா துப்பாக்கி சூடு: சஞ்சீவ-பத்மே பகையின் தொடர்ச்சியென எழுந்துள்ள சந்தேகம்
கம்பஹா, அகராவிட்டவில் நேற்று மாலை, இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவமும், இரண்டு குழுக்களுக்கு இடையிலான பகையின் தொடர்ச்சியாகும் என்று பொலிஸார் நம்புகின்றனர்.
உந்துருளி உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் இடத்திலேய, இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.
இதன்போது, வணிக அகத்தின் உரிமையாளர் சாமர சந்தருவன் மற்றும் உதவியாளர் அசித தேவிந்த ஆகியோர் காயமடைந்தனர்.
பகையின் தொடர்ச்சி
துப்பாக்கிதாரி மற்றும் அவரது நண்பரும் உந்துருளியில் வந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்த நிலையில் வணிக உரிமையாளர் வெளிநாட்டில் இருந்து செயல்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான "கெஹெல்பத்தர பத்மே" உடன் தொடர்புடையவர் என்றும், ஹல்ஃப்ஸ்டோர்ப் நீதிமன்றத்திற்குள் 'கனேமுல்லே சஞ்சீவ' கொலையைத் திட்டமிட்டவர் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
முன்னதாக, கனேமுல்லே சஞ்சீவ'வின் நண்பர் ஒருவரால், வணிக உரிமையாளர் அண்மையில் அச்சுறுத்தப்பட்டார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது காயமடைந்தவர்கள் கம்பஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.