அறிக்கையை மறைப்பதால் பிரதமர் ஹரிணியே தவறிழைத்துள்ளார்: கம்மன்பில பகிரங்க அறிவிப்பு
புதிய கல்வி மறுசீரமைப்பின் போது ஆறாம் தரத்திற்காக தயாரிக்கப்பட்ட முன்மாதிரி புத்தகம் ஒன்றில் (English Language First Term Module Grade 6) விடப்பட்டுள்ள தவறு தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணையின் பின்னர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையை ஏன் அரசு வெளியிட தயங்குகிறது என முன்னாள் அமைச்சர் கம்மன்பில கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்றையதினம் (05.01.2026) நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சிகளின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்திருந்தார்.
தொடர்ந்துரையாற்றிய அவர்,
தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து இராணுவத்தை காப்பாற்ற உதவிகோரிய அரச தலைவர்: பாட்டலி வெளிப்படுத்திய இரகசியம்
உள்ளக விசாரணை அறிக்கை
இந்த அறிக்கை உள்ளக விசாரணையில் வெளியிடப்பட்டுள்ளது என தட்டிக் கழிக்கின்றனர்.
தவறை செய்தவர் யார் என்று முதல் விசாரணைகளில் தெரியவந்திருப்பதால் அது தொடர்பில் மக்களுக்கு தெரியப்படுத்தி அரசின் இரண்டாது தலைவரை காப்பாற்றுவதே அரசு செய்ய வேண்டிய கடப்பாடாகும்.

நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இது தொடர்பான உண்மை தகவல்களை வெளியிடுவார்கள் என்று நாம் எதிர்பார்த்தோம்.
ஆனால் அப்படி ஒன்று வெளியிடவில்லை. உள்ளக விசாரணை அறிக்கையை மறைப்பதென்றால் தவறிழைத்தது பிரதமரோ என்ற சந்தேகம் எழுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.