31 ஆம் திகதிக்கு முன் கைது செய்யப்படுவாரா கம்மன்பில
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்பதை தாம் எழுதுகின்ற புத்தகத்தின் ஊடாக எதிர்வரும் 31 ஆம் திகதி வெளிப்படுத்துவேன் என உதய கம்மன்பில கடந்த வாரம் தெரிவித்து இருந்தார்.
இதேவேளை, உதய கம்மன்பிலவுக்கு எதிராக 20 மில்லியன் பங்குமோசடி தொடர்பான வழக்கு எதிர்வரும் 27 ஆம் திகதி மீள விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், குறித்த வழக்கின் அடிப்படையில் உதய கம்மன்பில கைது செய்யப்படலாம் என்கின்ற மாதிரியான கருத்தினை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கூறியிருந்தார்.
இதனையடுத்து, முடிந்தால் என்னைக் கைது செய்து பாருங்கள் என உதய கம்மன்பில சவால் விடுத்துள்ளார்.
மேலும், 31 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை தான் வெளிப்படுத்தி விடுவேன் என்ற பயத்தில் தம்மை கைது செய்ய முயற்சிப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
எனினும் உதய கம்மன்பிலவுக்கு எதிரான மோசடி வழக்கு உறுதி செய்யப்பட்டால் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது.
இந்த விடயம் தொடர்பான விரிவாக ஆராய்கின்றது நியூஸ் இன்சைட் நிகழ்ச்சி....
ஸ்ருதி வீட்டு உணவால் அவதிப்படும் விஜயா, எலி தொல்லையில் மாட்டிக்கொண்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புத்தம் புதிய சீரியல் பராசக்தி... படப்பிடிப்பு தள போட்டோக்கள் Cineulagam
ஜனனி சொன்ன ஒரே ஒரு விஷயம், ஷாக்கான ஈஸ்வரி, கதிர் போடும் திட்டம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
அட சன் டிவி சீரியல் நடிகைகளா இவர்கள், எல்லோரும் எவ்வளவு அழகு பாருங்க... இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam