ஜெனிவா என்பது அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளின் கருவி! கம்மன்பில காட்டம்
அரசாங்கம் தற்போது வரையில் சர்வகட்சி அரசாங்கத்திற்கான வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
சர்வகட்சி அரசாங்க வேலைத்திட்டம்
மேலும் பழைய விளையாட்டை விளையாட முடியும் என அரசாங்கம் நினைத்துக் கொண்டிருக்கின்றது.
இதன் மூலம் நாடு அதள பாதாளத்திற்கே தள்ளப்படும். மக்கள் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை இழந்து விடுவார்கள்.
அத்துடன் அரசாங்கம் தற்போது முன்னெடுக்கும் செயற்திட்டங்கள் ஊடாக நாட்டிலுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது. அதற்காக ஒரு நிரந்தர தீர்வை காண்பதற்கு நாங்கள் தீர்மானித்துள்ளோம்.
அமெரிக்காவின் ஏகாதிபத்தியவாதிகளின் கருவி
ஜெனிவா என்பதும் அமெரிக்காவின் ஏகாதிபத்தியவாதிகளின் ஒரு கருவி.
அமெரிக்காவின் தந்திரோபாயங்களில் இருந்து வெளியெறும் நாடுகளை கட்டுப்படுத்தவே ஜெனிவா அமைக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் 51ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் இடம்பெற்று வரும் நிலையில் இலங்கை தொடர்பிலான பல விடயங்கள் குறித்த மாநாட்டில் பேசப்படுகின்றன.
ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கையில் இருந்து சில பிரதிநிதிகள் ஜெனிவா மாநாட்டிற்கு சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.