பணச் சூதாட்ட ஒழுங்குப்படுத்தல் அதிகார சபை சட்டமூலத்திற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி!
பணச் சூதாட்ட ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையை நிறுவுவதற்கான சட்ட மூலத்திற்கு அரசாங்க நிதி பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கையில் பந்தயம் கட்டுதல், சூதாட்ட நிறுவனங்களை தரப்படுத்துதல், சமூகத்திற்கு ஏற்படும் தீங்கைக் குறைத்தல், சுற்றுலாத் துறையை மேம்படுத்துதல் மற்றும் பொருளாதாரத்தை அதிகரித்தல் போன்றவற்றுக்கான பரந்த மற்றும் முழுமையான நோக்கத்தைக் கொண்ட ஒரு சுயாதீன ஒழுங்குபடுத்தல் அமைப்பாக பணச் சூதாட்ட ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையை நிறுவுவதற்கு இந்த சட்டமூலம் பங்களிக்கவுள்ளது.
சட்டமூலம்
அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ச டி சில்வா வௌிநாடு சென்றுள்ளமையினால், குறித்த குழுவுக்கு தற்காலிகமாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவுப் ஹக்கிம் தலைமை தாங்கியிருந்தார்.
இந்த நிலையில் ரவுப் ஹக்கிம் தலைமையில் கடந்த 12ஆம் திகதி, அந்த குழு கூடிய போதே, பணச் சூதாட்ட ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையை நிறுவுவதற்கான சட்டமூலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறித்த சட்டமூலம் தொடர்பில் அரசாங்க நிதிப் பற்றிய குழுவில் இதற்கு முன்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில் கலந்துரையாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் மாலை திருவிழா




