கொழும்பில் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு! காலிமுகத்திடல் போராட்டக்களத்தின் தற்போதைய நிலவரம்
காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டகளத்தின் 123ஆவது நாளான இன்றும் மக்கள் தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கோட்டா கோ கம பகுதியில் பெருமளவான தற்காலிக கூடாரங்கள் அகற்றப்பட்டிருந்தாலும், ஒரு சில கூடாரங்கள் அகற்றப்படாமலே இருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த நிலையில் காலிமுகத்திடல் போராட்டக்களத்தின் போராட்ட மேடைப்பகுதியில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
காலிமுகத்திடல் போராட்டக்களத்தின் முன்னணி செயற்பாட்டாளர்களின் கைது நடவடிக்கையையும், அரசாங்கத்தின் அடக்குமுறையையும் குறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கண்டித்துள்ளனர்.
இதேவேளை இன்றைய தினம் கொழும்பில் மாபெரும் போராடத்தை முன்னெடுப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.