தொடரும் அடக்குமுறைகள்! போராட்டக்காரர்களை பின் தொடரும் இரகசிய பொலிஸ் (Video)
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக காலிமுகத்திடலில் எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்த முன்னணி போராட்டகாரர்களுக்கும் இலங்கை பொலிஸாருக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
கொம்பனி தெருவில் அமைந்துள்ள பகுதியில் நேற்றைய தினம் மக்கள் சந்திப்பு கூட்டம் ஒன்றிற்கு சென்றிருந்த காலிமுகத்திடல் போராட்ட களத்தின் முன்னணி செயற்பாட்டாளர்களில் ஒருவரான டானிஸ் அலி உட்பட குழுவினரிடம், கொம்பனி தெரு பொலிஸ் நிலையத்தின் மூன்று பொலிஸ் அதிகாரிகள் தேசிய அடையாள அட்டைகளை கேட்டு விசாரணை செய்துள்ளனர்.
இதன்போதே இலங்கை பொலிஸாருடன் அமைதியின்மை ஏற்பட்டதாக காலிமுகத்திடல் முன்னணி செயற்பாட்டாளரான டானிஸ் அலி தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் எமது ஊடகப்பிரிவு டானிஸ் அலியை தொடர்பு கொண்டு வினவிய போது,
“இலங்கையின் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்ற பின்னர் காலிமுகத் திடல் போராட்டகாரர்களை அடக்கும் நடவடிக்கைகளின் மற்றுமொரு செயற்பாடாகவே தாம் கருதுவதாக குறிப்பிட்டார்.”
மீண்டும் காலி முகத்திடலில் போராட்டம்! பெருமளவிலான படையினர் குவிப்பு (Video) |