மக்களின் கடும் எதிர்ப்பு - காலி முகத்திடலில் பின்வாங்கிய கலகத்தடுப்பு பொலிஸார்
இன்று காலி முகத்திடலில் குவிக்கப்பட்ட கலகத்தடுப்பு பொலிஸார், போராட்டக்காரர்களின் எதிர்ப்பை அடுத்து மீளப் பெறப்பட்டனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான போராட்டம் தொடரும் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் அதிகளவான கலகத்தடுப்பு பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இருப்பினும், அந்த இடத்தில் திரண்டிருந்த போராட்டக்காரர்கள் சிலர் காவல்துறையினரை எதிர்கொண்டனர். இறுதியில் பொலிஸார அங்கிருந்து கலைந்து சென்றனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் மேடையொன்றை அமைக்கத் தொடங்கியதை அடுத்து, கலகத் தடுப்புப் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
மூத்த காவல்துறை அதிகாரிகள் போராட்டக்காரர்கள் சிலரிடம் பேசி மேடையை அகற்றுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால் போராட்டக்காரர்கள் அதற்கு மறுத்துவிட்டனர்.
பின்னர் கலகத் தடுப்புப் பிரிவினர் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டனர். ஆனால் போராட்டக்காரர்கள் அவர்களை எதிர்கொண்டதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
