காலி முகத்திடலில் நபரொருவர் மீது கொடூர தாக்குதல்! அருகிலிருந்தவர்களின் மோசமானச் செயல்
கொழும்பு - காலி முகத்திடல் வளாகத்தில் நபர் ஒருவர் மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பான காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.
குறித்த நபரை திருடன் என்று கூறியும், தவறான செயலை செய்தார் என்று கூறியும் காலி முகத்திடலில் அமைந்துள்ள சிறு கடைகளில் வேலை செய்பவர்கள் போல தோற்றமளிக்கும் சிலர் தாக்கியுள்ளனர்.
எனினும், தாக்குதலுக்கு இலக்கான நபர் இந்த தாக்குதலை ஏற்றுக் கொள்ள முடியாது அழும் காட்சி காணொளியில் பதிவாகியுள்ளது.
அருகிலிருந்தவர் இந்த தாக்குதலை நடத்த வேண்டாம் என்றும், அப்படி தொடர்ந்தால் பொலிஸாருக்கு அறிவிப்பேன் என்றும் எச்சரிக்கும் போதும் கூட, குறித்த நபருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, அண்மையில் வெலிக்கடை சிறைச்சாலையில் திருடன் என அழைத்துச் செல்லப்பட்டு தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞன் தொடர்பிலும் குறித்த நபர் சுட்டிக்காட்டி தாக்குதலில் ஈடுபட்டவர்களை எச்சரித்தும் கூட அவர்கள் மீண்டும் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபடுதை காணக்கூடியதாக உள்ளது.
இவை அனைத்தையும் தாண்டி, குறித்த நபரை மனிதாபிமானமற்ற வகையில் தாக்கும்போது அருகில் இருந்தவர்கள் அதனை தடுக்க முயற்சிக்காமை தாக்குதலுக்கு இலக்கான நபருக்கு இழைக்கப்பட்ட தாக்குதலை விட கொடூரமான அநீதியாகும்.