கஜேந்திரகுமார் எம்.பியின் வாகனத்தில் மோதுண்டு பெண் ஒருவர் பலி
யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்(Gajendrakumar Ponnambalam) பயணித்த வாகனத்தில் மோதுண்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புத்தளம் - போலவத்த பிரதேசத்தில் நேற்று அதிகாலை 5.40 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாகன சாரதி கைது
விபத்திற்கு காரணமான வாகன சாரதி கைது செய்யப்பட்டு மாரவெல நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பான வழக்கு எதிர்வரும் 16ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இதேவேளை, விபத்தில் உயிரிழந்த பெண் தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. மேலும், உயிரிழந்த பெண்ணின் சடலம் ஹலவத்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அழகி படத்தில் நடித்த இந்த நடிகரை உங்களுக்கு நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam
உள்நாட்டில் கடும் நெருக்கடி... இந்தியாவில் செயல்படத் தொடங்கிய பிரித்தானியப் பல்கலைக்கழகங்கள் News Lankasri