மக்களுக்கு எதிராக இடம்பெறும் அடக்குமுறைகள்: கஜேந்திரகுமார் எம்.பி விடுத்துள்ள கோரிக்கை
மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் பொலிஸார் எப்படி வேலை செய்கிறார்கள் என்பது குறித்து எமக்கு தெளிவு படுத்த வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவி்த்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று (27) நடைபெற்ற செலவுத் திட்ட விவாதத்தின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,குறிப்பாக வடக்கு கிழக்கு பெரிதும் இராணுவமயமாக்கப்பட்டுள்ளது. அடக்குமுறையாக செயல்படுகிறது. அந்தப் பிரதேச மக்களுக்கும், உண்மைக்கும் விரோதமாக செயற்படுகின்றது.
நீதிப்பொறிமுறை
சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் கனிஸ்ட பொலிஸ் உத்தியோகத்தர்களில் பெரும்பாலானவர்கள் தண்டனை இடமாற்றங்களில் வடக்கு கிழக்கில் உள்ளனர்.எனவே மக்கள் மீதான இவர்களின் அணுகுமுறை மிகவும் மோசமாக காணப்படுகிறது.
சில பொலிஸ் அதிகாரிகள் தமிழ் மொழி பேச மாட்டார்கள். அவர்களினால் மக்கள் பாதிக்கப்படும் போது., பொலிஸாரின் தவறான நடத்தைகள் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொள்ளும் என்று முழுமையாக நம்பினோம். அவர்கள் தலையீடு செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
அதுதான் உள்நாட்டு சூழலில் எமக்கு இருக்கும் ஒரே நம்பிக்கையாகும். எனவேதான் முன்னைய அரசாங்கத்தின் காலத்திலும் மனித உரிமைகள் ஆணைக்குழு தவறாக நடந்துகொண்ட போதும் நாங்கள் பிரச்சினைகளை எழுப்பினோம்.
பொலிஸார் அல்லது ஏதேனும் ஒரு அரச நிறுவனத்தின் நியாயத்தன்மை மற்றும் உண்மைத்தன்மை குறித்து நாங்கள் கேள்வி எழுப்பினால், அவர்களால் எங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக நாங்கள் கருதும் போது, எங்களிடம் இருக்கும் ஒரே வழிமுறையாக மனித உரிமைகள் ஆணைக்குழுவையே நம்புகிறோம்.
ஆணைக்குழு நம்பிக்கையைக் கட்டியெழும்பும் விதமாக சுதந்திரமான முறையில் செயற்படவேண்டும்.. அது யாராக இருந்தாலும் சரி அவற்றுள் தலையிட வேண்டும். உங்களிடம் நீதிப்பொறிமுறை இருக்க வேண்டும், அந்த நீதிவிசாரணை உங்களிடம் இல்லையென்றால் அது ஒரு பிரச்சனையாகிவிடும்.
அரசாங்கத்தின் செயற்பாடுகள்
இதுவே கடந்த அரசாங்கத்தின் கீழும் இருந்தது. அவர்களுக்கு சுதந்திரம் உள்ளது என்பதை இந்த அரசாங்கம் ஆணைக்குழுவிடம் வலியுறுத்த வேண்டும் என்பதை நான் வலியுறுத்துகிறேன்.
விசாரணைகளை பெறுமதியாக ஆக்குவதற்கும், அவர்களுக்கு சுதந்திரம் மற்றும் சட்டபூர்வமான தன்மை உள்ளது. அவ்வாறு நடக்கபோவதில்லையென்றால், அரசாங்கத்தின் செயற்பாடுகள் அனைத்தையும் நாம் கேள்விக்கு உட்படுத்த வேண்டும்.
எனவே தலையீடு குறித்து விவாதிக்கப்படும் விடயங்களில் ஜனாதிபதி நம்பகத்தன்மையுடன் இருக்க வேண்டுமானால் அவர் இதனை உறுதிப்படுத்த வேண்டும்.
இந்த அரசாங்கம் உண்மையில் அந்த அமைப்பு மாற்றத்தை கொண்டு வரப் போகிறது என்று வடக்கு கிழக்கு மக்கள் உண்மையாக நம்பவேண்டும்.
அப்படியில்லையாயின் நீங்கள் அமைப்பு மாற்றம் என்று சொல்ல முடியாது. முந்தைய அரசாங்கங்கள் செய்ததைப் போலவே நீங்களும் செய்வீர்களாயின் தவறிழைக்கிறீர்கள் என்பதே அர்த்தமாகும் என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |