வேட்பு மனுக்களைக் கோர வேண்டாம்:கஜேந்திரகுமார் எம்.பி விடுத்துள்ள கோரிக்கை
வரவு செலவுத் திட்டப் பாதீடு முடிவடையும் வரை தயவு செய்து வேட்பு மனுக்களைக் கோர வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் (17) உரையாற்றும் போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
அத்தோடு, மேற்குறித்த காலத்திற்கு முன் நீங்கள் மனுக்களைக் கோருவீர்களாயின் உரிமை பறிக்கப்பட்டவனாவேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
பெரும்பான்மை
அவர் மேலும் தெரிவிக்கையில் ,ஏற்கனவே எனது கட்சியில் இருந்து, எந்தக் குழுவிலும் இல்லாத தனியொரு நாடாளுமன்ற உறுப்பினராக நான் உள்ளேன்.
எந்த குழுக்களிலும் உள்வாங்கப்படவில்லை. ஏனென்றால் நீங்கள் மிகவும் கண்டிப்பானவர்கள் போன்று, குழுவில் சேரக்கூடிய உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தமட்டில், எண்ணிக்கையை போதுமான அளவு அதிகரிக்க நீங்கள் தயாராக இல்லை, அதனால் நீங்கள் அனைவரும் பெரும்பான்மையை வைத்திருக்கிறீர்கள்.
நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ஒரே காரணத்தால் தான் இங்கு வந்து எனது கருத்தைத் தெரிவிக்க முடிகிறது.
வேட்புமனு
வரவு செலவுத் திட்டமானது எமக்கானது. அதில் விவாதித்து வாக்களிக்க முடியாமல் தவிர்க்கப்படுமானால் நீங்கள் திறம்பட என் வாக்குரிமையை மறுக்கிறீர்கள் என்பதே அர்த்தமாகும்.
வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்புக்கு முன்னர் நீங்கள் வேட்புமனுக்களை அழைக்கப் போகிறீர்கள் என்றால், எதிர்க்கட்சியைச் சேர்ந்த மற்றைய கௌரவ உறுப்பினர்கள் பேசியவாறு, வேறு எந்தத் திருத்தங்களையும் பற்றி நான் பேசப்போவதில்லை.
இதில் குறைபாடுகள் உள்ளன.அக்குறைபாடுகள் அனைவருக்கும் பொருந்தும். அந்த குறைபாடுகளை எப்படியாவது போக்கிக்கொள்ளலாம். அல்லது எதிர்காலத்தில் சட்டங்களை திருத்தலாம் என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |