சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வுத் திட்டமே எமது எதிர்பார்ப்பு:கஜேந்திரகுமார் பொன்னம்பலம்(Video)
13ஆம் திருத்தச்சட்டம் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வு அல்ல, அதனை ஒரு ஆரம்பப்புள்ளியாகக் கூட கருத முடியாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழில் நேற்று (08.02.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,“13ஆம் திருத்தச்சட்டத்தை ஒரு பேச்சுப்பொருளாக கூட கருதவில்லை, இது தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினைக்கான நிகழ்ச்சி நிரலில் இடம்பெறுவதைக் கூட நாம் விரும்பவில்லை.
சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வு
13ஆம் திருத்தச்சட்டத்தை சிங்கள பௌத்த பேரினவாதிகள் எதிர்ப்பதற்குக் காரணம் அது இந்தியாவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளமை மற்றும் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தினை இல்லாது செய்வதற்குமே ஆகும்.
இந்த திருத்தச்சட்டம் மூலாமாக தமிழ் மக்களுக்கு எந்த ஒரு தீர்வும் கிடைக்கப்போவதில்லை என்பதுடன் இது ஒற்றையாட்சிக்கு உட்பட்ட ஒன்றாகவே விளங்குகின்றது.
எனவே தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வுத் திட்டத்தினையே நாம் எதிர்பார்க்கின்றோமே தவிர ஒற்றையாட்சி முறைக்குட்பட்ட தீர்வுகளை அல்ல.”என தெரிவித்துள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் வழுக்கி விழுந்த தமிழ், பதறி அடித்து ஓடிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri
