புத்த பெருமான் தலைகுனியும் அளவுக்கு அரசாங்கத்தின் செயற்பாடுகள் உள்ளது: கஜேந்திரகுமார் எம்.பி

Sri Lankan Tamils Gajendrakumar Ponnambalam Sri Lankan political crisis
By Thileepan Nov 29, 2023 11:08 PM GMT
Report

புத்த பெருமான கூட வெட்கித் தலைகுனியக்கூடிய அளவுக்குத் தான் அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொது நிர்வாக அமைச்சுக்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நேற்று (29.11.2023) நடைபெற்ற விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

விஜயகாந்த் உடல்நிலையில் திடீர் பின்னடைவு

விஜயகாந்த் உடல்நிலையில் திடீர் பின்னடைவு

அரசியல் பழிவாங்கல்

அம்பாறை மாவட்டம், கல்முனை வடக்கு பிரதேச செயலகம் 1989 ஆண்டு புதிய பிரதேச செயலர் பிரிவாக அங்கீகரிக்கப்பட்டது.

1993 இல் அமைச்சரவைப் பத்திரத்தினூடாக அங்கீகரிக்கப்பட்ட தனி பிரதேச செயலாளர் பிரிவாக இயங்குவதற்கு அங்கீகரிக்கப்பட்டு, அது உத்தியோகபூர்வமாக இயங்கி வந்தது.

புத்த பெருமான் தலைகுனியும் அளவுக்கு அரசாங்கத்தின் செயற்பாடுகள் உள்ளது: கஜேந்திரகுமார் எம்.பி | Gajendrakumar Mp Parliament Cut

காலப்போக்கில், முழுமையாக பிரதேச செயலாளர் பிரிவாக இயங்குவதற்குரிய கணக்காளர் போன்ற முக்கியமான நியமனங்களை அதற்கென வழங்காமல், அரசியல் காரணங்களுக்காக கல்முனை முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவுக்கு நியமனம் செய்து கல்முனை வடக்கு பிரதேச செயலம் உப பிரிவாகவே செயற்பட்டு வருகின்றது.

இதனால் மக்களுக்கு தேவையான நிர்வாகத்தை நடத்த முடியாமலும், அரசியல் காரணங்களால் பழிவாங்கல்களும் நடைபெற்று வருகின்ற நிலையில், கடுமையான பாதிப்புக்களை தமிழ் மக்கள் சந்திக்கிறார்கள்.

இதன் காரணமாக, ஏற்கனவே வர்த்தமானி மூலம் அங்கீகரிக்கப்பட்டு எடுக்கப்பட்டிருந்த முடிவை நடைமுறைபடுத்துவதற்கு இன்றைக்காவது நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.

விடுதலை புலிகள் தலைவரின் மனைவியை சூழ்ந்து வந்த ஆபத்துக்கள்(Video)

விடுதலை புலிகள் தலைவரின் மனைவியை சூழ்ந்து வந்த ஆபத்துக்கள்(Video)

தமிழ் மக்களுக்கு தொடரும் அநியாயங்கள்

இந்தவிடயத்தை பல வருடங்களாக கேட்டுக் கொண்டு வருகின்றோம். ஆனாலும் எதுவும் நடைபெறாமல் உள்ளது. இதனை தடுத்து நிறுத்துவதற்கு எந்தவொரு நியாயமான காரணங்களும் கிடையாது.

வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் வாழும் ஏனைய பிரதேசங்களில் முஸ்லிம் பிரிவுகள், சிங்களப் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

புத்த பெருமான் தலைகுனியும் அளவுக்கு அரசாங்கத்தின் செயற்பாடுகள் உள்ளது: கஜேந்திரகுமார் எம்.பி | Gajendrakumar Mp Parliament Cut

சட்டவிரோத குடியேற்றங்கள் நடந்திருந்தும் கூட அந்த சட்டவிரோதமான செயலை சட்ட பூர்வமாக்குகின்ற வகையில் அந்தப் பிரிவுகளை உருவாக்க முடியுமானால், இயல்பாகவே - பூர்வீகமாக வாழ்ந்துவந்த தமிழ் மக்களுடைய பிரதேச செயலகர் பிரிவை அங்கீகரிக்க ஏன் உங்களால் முடியாதுள்ளது? என்ற கேள்வியை பிரதமரினடைய பொதுநிர்வாக அமைச்சுக்களிடம் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.

இன்று உலகத்துக்கு நல்லிணக்கத்தைப் பற்றி பேசுகின்ற நீங்கள் இதையாவது செய்யுங்கள்.

அரசியல் காரணங்களுக்காக - இந்த அநியாயங்கள் தமிழ் மக்களுக்கு தொடர்வதை அனுமதிக்க வேண்டாம். வேறு தரப்புகளுக்கு கிடைக்கக் கூடிய அங்கீகாரங்களை நாம் ஒருபோதும் தடுப்பவர்களல்ல. எங்களுக்கு தேவைப்படும் விடயத்தையே நாங்கள் கேட்கின்றோம்.” என்றார்.

மாவீரர் தின நிகழ்வில் விடுதலை புலிகளின் சின்னம் பொறித்த ஆடை: ஆரம்பமாகும் விசாரணை

மாவீரர் தின நிகழ்வில் விடுதலை புலிகளின் சின்னம் பொறித்த ஆடை: ஆரம்பமாகும் விசாரணை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US