வல்வெட்டித்துறை விவசாய அமைப்புகளுடன் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சந்திப்பு
யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை, கொம்மந்தறை சனசமூக நிலையத்தில் வல்வெட்டித்துறை விவசாய அமைப்புகளுக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் இடையில் சந்திப்பபொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது விவசாயிகள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
மக்களின் கோரிக்கை
அத்துடன் புகையிலைச் செய்கை தடையிலிருந்து முழுமையாக மீள 3 - 4 வருட கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்றும் புகையிலைக்குப் பதிலாகச் சிறந்த மாற்றுப் பயிர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் எனவும் மக்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் மாற்றுப் பயிராகச் சின்ன வெங்காயத்தைப் பயிரிட்டு சந்தைக்குக் கொண்டுவரும் வேளையில், அரசாங்கம் பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வதால் ஏற்படும் நஷ்டத்தைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் விவசாயிகளின் பிரச்சினையை எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் முன்வைக்கவுள்ளதாகவும், விசேட பிரேரணை ஒன்றையும் கொண்டுவர உள்ளதாகவும் உறுதியளித்துள்ளார்.