ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எப் இந்தியாவின் முகவர்கள்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Jaffna Gajendrakumar Ponnambalam Sri Lanka Politician Suresh Premachandran
By Shan Feb 02, 2023 06:25 PM GMT
Report

கொள்கை என்ற பெயரில் இந்தியாவிற்கு விசுவாசமாக நின்று இனத்தை விற்பதே தமிழ் கட்சிகளிடையிலான போட்டி என்று யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். 

அத்துடன் ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எப் ஆகியன இந்தியாவின் முகவர்கள் என்றும் விமர்சித்துள்ளார்.

வவுனியாவிற்கு இன்று (02.02.2023) விஜயம் செய்த அவர் தேர்தல் பரப்புரை கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எப் இந்தியாவின் முகவர்கள்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் | Gajendrakumar Blame Tamil Parties

எமது விடயங்கள் சர்வதேச பேசுபொருள்

இது ஒரு உள்ளூராட்சி தேர்தலாக இருந்தாலும் இந்த சூழலை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

போர் முடிவடைந்து 14 வருடங்கள் கடக்கின்ற நிலையிலும் பொருளாதார ரீதியாகவோ அரசியல் ரீதியாகவோ எந்தவிதமான முன்னேற்றமும் தமிழ் மக்களுக்கு கிடைக்கவில்லை.

போர் குற்றத்திற்கும் தீர்வு கிடைக்கவில்லை. எமது விடயங்கள் சர்வதேச மட்டத்தில் பேசுபொருளாக இருந்தாலும் பாதிக்கப்பட்ட தரப்பான நாங்கள் முன்னேற்றமடையாமலே இருக்கிறோம்.

ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எப் இந்தியாவின் முகவர்கள்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் | Gajendrakumar Blame Tamil Parties

சிங்கள பௌத்த ஆட்சி

பயங்கரவாத தடைச்சட்டம் ஒரு கொடூரமான சட்டமாக சொன்னாலும், அந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் சிங்கள மக்கள் விடுவிக்கப்படுகின்றார்களே தவிர தமிழ்மக்கள் தொடர்ச்சியாக சிறைகளிலேயே வாடுகின்றனர்.

அத்துடன் இன்று அனைவராலும் பேசப்படும் 13 ஆம் திருத்தம் ஒற்றையாட்சிக்குள் இருக்கின்ற ஓர் கட்டமைப்பு. ஒற்றையாட்சி என்பது சிங்கள பௌத்த ஆட்சி. வேறு எவருக்கும் அங்கு அதிகாரம் இல்லை.

ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எப் இந்தியாவின் முகவர்கள்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் | Gajendrakumar Blame Tamil Parties

அதனாலேயே தமிழ் பெருந்தலைவர்கள் நீண்ட காலமாக இதனை நிராகரித்து வந்திருக்கின்றார்கள். விடுதலைபுலிகள் கூட அதனை ஏற்றுகொள்ளவில்லை.

எங்களால் தெரிவு செய்யப்படுகின்றவர்கள், இந்த படுமோசமான ஏமாற்று வேலைக்கு விலை போனமையினாலேயே இந்த திருத்தம் பற்றி பலரும் இன்று பேசுகின்றார்கள். அதுவே உண்மை.

13 வது திருத்தத்தை ஏற்கும் நிலை

இதனை நாம் எவ்வாறு மாற்றப்போகின்றோம். இந்த தேர்தல் ஊடாக மக்கள் தமது அரசியல் விருப்பத்தை வெளிப்படுத்த வேண்டும்.

போர் முடிவடைந்து 14 வருடங்களாக தமிழர்கள் கஷ்டபடுகிறார்கள், எனில் அதில் தவறு உள்ளது. அதனை நிவர்த்தி செய்வதற்கு உங்கள் கையில் இருப்பது வாக்கு மாத்திரமே.

ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எப் இந்தியாவின் முகவர்கள்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் | Gajendrakumar Blame Tamil Parties

எனவே இத்தனை வருடங்களாக உங்களை ஏமாற்றிய அதே தரப்பிற்கே வழங்க போகின்றீர்கள் என்றால் நீங்கள் அதற்கு இணங்குகின்றீர்கள் என்றே உலகம் நோக்கும்.

இதில் மாற்றத்தை ஏற்ப்படுத்துவதற்காக கடந்த 14வருடங்களாக தமிழ்தேசிய மக்கள் முண்ணனி மக்களிடத்தில் தெளிவை ஏற்படுத்தி வருகின்றோம். நாம் சொன்ன ஒவ்வொன்றும் இன்று உங்கள் கண்முன்னே நிரூபிக்கப்பட்டு வருகின்றது.

மக்கள் எங்களை நிராகரித்தார்கள் ஆனால் நாம் மீண்டும் மக்களிடத்திலே வந்தோம். இன்று எம்மைத்தவிர அனைத்து தரப்புக்களும் 13 வது திருத்தத்தை ஏற்கும் நிலையிலேயே உள்ளது. நாம் மாத்திரமே கொள்கை அளவில் மறுத்து நிற்கின்றோம்.

பதவி ஆசை

விக்னேஸ்வரன் தனக்கு செயலாளர் பதவி தரவில்லை என்று பிரிகின்றார். ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எப் ஆகிய இந்தியாவின் முகவர் அமைப்புக்களும் தங்களுக்கு முக்கியத்துவம் வழங்கவில்லை என்று பிரிகின்றார்கள்.

இவர்கள் பிரிந்து நிற்பதற்கு காரணம் கொள்கையல்ல பதவி. அனைவரும் கொள்கை என்ற பெயரில் இனத்தை விற்பதற்கு தயாராகியுள்ளனர்.

ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எப் இந்தியாவின் முகவர்கள்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் | Gajendrakumar Blame Tamil Parties

யார் இந்தியாவிற்கு அதிகமாக விசுவாசமாக நின்று இனத்தை விற்கலாம் என்பதே அவர்களிற்கிடையிலான போட்டி. அதற்காவே பிரிந்து நிற்கின்றார்கள்.

இவை அனைத்தும் தெரிந்தும் எம்மை ஆதரிக்காமல் பிரிந்து நின்று ஒற்றையாட்சிக்குள் முடங்கிப்போயுள்ள தரப்புகளிற்கு வாக்குகளை வழங்கினால் இந்த தேர்தலுக்கு பின்னரான தமிழர் அரசியல் உரிமை பயணம் முடிவிற்கே வரும்.

எமது அரசியலும் ஒற்றையாட்சிக்குள் நிரந்தராமாக முடங்கிப்போகும். எனவே மக்களாகிய நீங்களே முடிவெடுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.

7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US