போராளிகளைக் கொச்சைப்படுத்துவோர் எங்கள் அமைப்பில் இருக்கவே முடியாது! கஜேந்திரகுமார் அதிரடி அறிவிப்பு
"கொள்கைக்காகப் பயணிக்கும் போராளிகளின் அர்ப்பணிப்பையும், தியாகத்தை நாம் உட்பட எவரும் கொச்சைப்படுத்த முடியாது. அந்தப் போராளிகளுக்கான மதிப்பைக் கொடுக்கத் தயாரில்லாத எவரும் எம் அமைப்பில் இருக்கவே முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் விவகாரம் தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரட்ணம் சுகாஷுக்கும் முன்னாள் போராளிகளுக்கும் இடையில் எழுந்துள்ள கருத்து மோதல்கள் குறித்து ஊடகங்கள் வினவியபோதே கஜேந்திரகுமார் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேச விடுதலைக்காக போராடிய போராளிகள்
"எமது தேச விடுதலைக்காகப் போராடிய போராளிகளை நாம் முன்னாள் போராளிகள் எனக் கருதவில்லை. தமது கொள்கைக்காக நேர்மையாகப் பயணிக்கும் அவர்கள் போராளிகள்தான்.
அவர்கள் எம் பெருமதிப்புக்கு உரியவர்கள். அவர்களது அர்ப்பணிப்பையும், தியாகத்தை நாம் உட்பட எவரும் கொச்சைப்படுத்த முடியாது. அந்தப் போராளிகளுக்கான மதிப்பைக் கொடுக்கத் தயாரில்லாத எவரும் எம் அமைப்பில் இருக்கவே முடியாது.
போராளிகளைப் போற்றுவதும், மக்களுக்காகத் தம்மை அர்ப்பணித்த அவர்களைப் பராமரிப்பதும் எமது தேசத்தின் தலையாய கடமை என்றே நான் கருதுகின்றேன்.
எமது தேசத்தின் கொள்கை
ஆனால், எத்தனையோ உயிர் அர்ப்பணிப்புக்களால் கட்டியெழுப்பப்பட்ட எமது தேசத்தின் கொள்கையைக் கைவிட்ட எவரும் தம்மை 'முன்னாள் போராளி' எனும் அடையாளத்தை வைத்துக் கொண்டு மக்களைப் பிழையாக வழிநடத்த முடியாது.
அப்படியாயின் கருணா கூட தன்னை
முன்னாள் போராளி என அழைத்து அந்த அடையாளத்தைக் காட்டி எம்மைப் பிழையாக
வழிநடத்த முடியும். அதற்கு மக்கள் அனுமதிக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.


சுடலைக்கழிவு அரசியல்? 1 நாள் முன்

வெளிநாட்டவர்கள் ஜேர்மன் குடியுரிமை பெறுவதை எளிதாக்கும் ஒரு விசா... சில பயனுள்ள தகவல்கள் News Lankasri

கனடாவுக்குள் நுழைய புலம்பெயர்வோருக்கு இலவச டிக்கெட்கள்?: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri

நடிகர் சத்யராஜா இது, திருமணத்தின் போது எப்படி இருந்துள்ளார் பாருங்க- இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam

விஜய்யின் பூவே உனக்காக பட புகழ் நடிகையா இது? இரண்டாவது திருமணம் செய்து எப்படி உள்ளார் பாருங்க Cineulagam

உளுந்து வடையில் நடுவில் ஓட்டை இருப்பதற்கு இதுதான் காரணமாம்! இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே Manithan

மொத்தமாக புரட்டிப்போட்ட நிலநடுக்கம்... இடிபாடுகளில் சிக்கி புதைந்த மகளின் கைகளை கோர்த்த நிலையில் தந்தை News Lankasri
