வட அமெரிக்காவில் தமிழ் அறிஞருக்காக நிறுவப்படவுள்ள நினைவுச் சின்னம்
கனேடிய தமிழர் பேரவை, கனடாவின் பிரின்ஸ் எட்வர்ட் தீவில் உள்ள பெடெக் நகரத்தில் புகழ்பெற்ற தமிழ் அறிஞர் ஜி.யு.போப் அவர்களைக் கௌரவிக்கும் உருவச் சிலையை திறந்துவைக்கவுள்ளது.
கனேடிய மண்ணின் முதல் தமிழறிஞரான ஜி.யு போப் அவர்களுக்கு அவரது பிறந்த மண்ணில், அவரது உருவச்சிலை ஒன்றை திறந்து வைப்பதன் மூலம் கனேடிய தமிழர் பேரவையானது வரலாறு ஒன்றை படைக்கவுள்ளது.
இந்த நிகழ்வு ஜூலை மாதம் 15 ஆம் திகதி காலை 10 மணிக்கு AST (9 AM EST, 6:30 PM IST, 2 PM GMT) நடைபெற உள்ளது.
அரசியல் மற்றும் சமூகத் தலைவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் அதில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த உருவச்சிலை வட அமெரிக்காவில் ஒரு தமிழ் அறிஞருக்காக நிறுவப்படவுள்ள முதலாவது நினைவுச் சின்னம் என்பது குறிப்பிடத்தக்கது.


படப்பிடிப்பில் ஏற்பட்ட மூச்சுத்திணறல்.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்ன மருமகள் சீரியல் நடிகர் நவீன் Cineulagam
ரிஷப ராசியில் உதயமாகும் புதன் - சுக்கிரன் : இன்று முதல் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan
3 மற்றும் 5 வயது குழந்தையை காட்டில் கைவிட்ட பிரான்ஸ் பெற்றோர்: போர்ச்சுகல் பொலிஸார் அதிரடி News Lankasri