எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம்! பீரிஸ் முன்வைக்கும் கேள்வி
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் மக்களை திசை திருப்பும் நோக்கிலானது என முன்னாள் வெளி விவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பிடித்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் நட்டையீடு பெற்றுக் கொள்வதற்காக வழக்கு தொடர்வதனை தவிர்க்க பாரிய அளவில் இலஞ்சம் வழங்கப்பட்டதாக அண்மையில் தகவல் வெளியாகி இருந்தது.
மக்களை தெளிவுபடுத்த வேண்டும்
இவ்வாறு பாரிய அளவிலான தொகை பணம் இலஞ்சமாக வழங்கப்பட்டு இருந்தால் அது குறித்து மக்களை தெளிவுபடுத்த வேண்டியது மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவின் கடமையாகும் என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
இந்த குற்றச்சாட்டு உண்மையானதா? நடக்கக்கூடியதா ? அல்லது போலியானதா? என்பது குறித்த கேள்விகள் எழுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது ஜோடிக்கப்பட்ட ஒரு பொய் என்றால் அதனையும் அம்பலப்படுத்த வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜோடிக்கப்பட்ட கதை
மக்களின் கவனத்தை திசை திருப்பும் நோக்கில் இந்த ஜோடிக்கப்பட்ட கதை வெளியிடப்பட்டதா என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் பாரிய அளவில் பணம் வைப்பிலிடப்பட்டால் அது நிதி சலவை சட்டங்களுக்கு அமைவானதா என்பது குறித்து கண்காணிக்கப்படும் எனவும் அந்நாட்டில் சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிறுவனத்துக்கு எதிராக இலங்கையில் வழக்கு தொடராது சிங்கப்பூரில் வழக்கு தொடர சட்டமா அதிபர் ஏன் தீர்மானித்தார் என்பது அம்பலப்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)
தையிட்டி விகாரை : என்ன செய்யலாம் 3 நாட்கள் முன்
![இந்த நட்சத்திரத்தில் பிறந்தவங்க பயமே அறியாதவர்களாக இருப்பார்களாம்.. நீங்க என்ன நட்சத்திரம்?](https://cdn.ibcstack.com/article/342c600b-996a-4b6b-b153-b646bf72b80a/25-67ab9acc7ed3d-sm.webp)
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவங்க பயமே அறியாதவர்களாக இருப்பார்களாம்.. நீங்க என்ன நட்சத்திரம்? Manithan
![விமான விபத்துக்கள் இனி அதிகமாக நடக்கும்... புதிய அச்சுறுத்தல்: எச்சரிக்கும் விஞ்ஞானிகள்](https://cdn.ibcstack.com/article/58329b6f-0e4a-4e90-8a1c-58cd7101f47a/25-67ab8d212a103-sm.webp)