ஜனாதிபதியிடம் ஜீ.எல்.பீரிஸ் எழுப்பியுள்ள கேள்வி
நாட்டின் பொருளாதாரம் வலுவாக கட்டியெழுப்பப்பட்டுள்ளதாகவும், நாட்டின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரகடனப்படுத்தினால், தேர்தலை நடத்துவதற்கு என்ன அச்சம் என்று முன்னாள் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் வினவியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல்
அட்டமஸ்தானாதிபதி கலாநிதி பல்லேகம ஹேமரதன தேரரை நேற்று (14) சந்தித்து ஜனாதிபதி தேர்தல் குறித்து உரையாடி ஆசி பெற்ற பின்னர் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,''ஜனாதிபதி தேர்தலை யாராலும் ஒத்திவைக்க முடியாது.
நாட்டின் பொருளாதாரம் வலுவாக கட்டியெழுப்பப்பட்டுள்ளதாகவும், நாட்டின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரகடனப்படுத்தினால், தேர்தலை நடத்துவதற்கு என்ன அச்சம்.
அரசியல் நிலைமைகள்
எனவே ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பதற்கு எந்தவொரு நபருக்கும் இடமில்லை.
ஜனாதிபதி தேர்தல் நடத்துவது தொடர்பாக அட்டமஸ்தானாதிபதி கலாநிதி ஹேமரத்தன தேரருடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடினேன்.
நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பிலும் கலந்துரையாடினோம்.''என்று கூறியுள்ளார்.

புடினிடமிருந்து ஐரோப்பாவை காப்பாற்ற பிரான்ஸ் நாட்டு அணு ஆயுதங்கள்: மேக்ரான் அதிரடி அறிவிப்பு News Lankasri

Personal Loan -யை விட வட்டி குறைவு.., Post Office-ன் இந்த திட்டத்தின் மூலம் எளிதாக கடன் வாங்கலாம் News Lankasri

நான் திருமணமே செய்துகொள்ள போவதில்லை, ஓபனாக கூறிய எதிர்நீச்சல் சீரியல் நடிகை... என்ன இப்படி சொல்லிட்டாங்க Cineulagam
