ஆட்சியை கைப்பற்ற பாடுபடும் ராஜபக்சர்கள் : சாடும் கோவிந்தன் கருணாகரம்
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைக்கு காரணமாக உள்ளவர்கள் அடுத்த ஆட்சியை கைப்பற்றுவதற்குரிய திட்டங்களை தொடங்கியுள்ளனர் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
"மலையகம் 200" எனும் மலையக மக்களின் பெருமையை பறைசாற்றும் நிகழ்வு நேற்று (17.10.2023) மட்டக்களப்பில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து தெரிவிக்கையில்,
மலையக மக்கள் அந்நிய செலாவணியை இட்டுத் தரும் மக்களாக இருந்தாலும் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக இருந்த குற்றவாளிகள் இன்றும் சுதந்திரமாக நடமாடி திரிகின்றனர்.
மலையக மக்களுடன் வடக்கு கிழக்கு மக்கள் என்றும் கைகோர்த்து இருப்போம்.
செவி சாய்க்க மறுக்கும் அரச அதிகாரிகள்
அண்மையில் இடம்பெற்ற மொட்டுவின் மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதியை காணவில்லை.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைக்கு காரணமாக உள்ளவர்கள் அடுத்த ஆட்சியை கைப்பற்றுவதற்குரிய திட்டங்களை தற்போதே தீட்ட தொடங்கியுள்ளனர்.
நமது மாவட்டத்தின் மேய்ச்சல் தரை சம்பந்தமான பிரச்சினைக்கு ஜனாதிபதி சாதகமான பதில் வழங்குகின்ற போதிலும் அரச அதிகாரிகள் அதற்கு செவி சாய்ப்பதில்லை என தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |