வல்லரசையே கதிகலங்க வைக்கும் உக்ரைன் போர் யுத்தி! மிரண்டு போயுள்ள ரஷ்யா
“கிழக்கு பகுதியை இழந்தது வேதனையளிக்கிறது, நாம் ரஷ்யாவின் ராணுவ சக்தியை அழிக்க வேண்டும், நாம் அதை அழிப்போம்.”என ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
ரஷ்யா எல்லையை ஒட்டியுள்ள நகரங்களைப் பற்றிப் பேசிய போதே ஜெலென்ஸ்கி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உக்ரேனியர்களின் எதிர்காலம்

மேலும் கூறுகையில்,“நமக்கு எந்த வகையான எதிர்காலம் இருக்க வேண்டும் என்பதை எல்லைப் பகுதியிலுள்ள நகரங்களின் வெற்றியே தீர்மானிக்கிறது, அங்கு உக்ரேனியர்களின் எதிர்காலமும் போராடப்படுகிறது.
உக்ரைன் நாட்டின் எதிர்காலம் பக்முட் மற்றும் மற்ற முக்கிய நகரங்களின் வெற்றியைப் பொறுத்தே இருக்கிறது.”என கூறியுள்ளார்.
ரஷ்ய தரப்பு தகவல்
ரஷ்யா உக்ரைனின் பக்முட் என்ற நகரைக் கைப்பற்றப் போராடி வருகிறது. மறுமுனையில் உக்ரைனும் கடுமையான ராணுவ தாக்குதலை நடத்துகிறது. மேலும் ஏற்கனவே ரஷ்யா பக்முட் நகரின் கிழக்குப் பகுதியைக் கைப்பற்றியுள்ளது.

பக்முத்தை கைப்பற்றுவது டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் மற்ற பகுதிகளைக் கைப்பற்ற அனுமதிக்கும் என ரஷ்ய தரப்பு தெரிவிக்கிறது.
ஆனால் கடந்த வாரங்களில் இரு தரப்பினருக்கும் பாரிய எண்ணிக்கையில் இழப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று உக்ரைனிய வீரர்கள் நகரில் ரஷ்ய ராணுவத்திற்குப் பெரிய இழப்பு ஏற்படுத்தும் அளவிற்குத் தாக்குதல் நடத்தியுள்ளது.
தொழில் தொடங்குவதற்குள் குணசேகரன், ஜனனிக்கு ஏற்படுத்திய பெரிய பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
Bigg Boss: பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற கதறியழும் சாண்ட்ரா... பிக்பாஸ் எடுக்கும் முடிவு என்ன? Manithan
முத்துவை அசிங்கப்படுத்திய சீதா, நீதுவால், ரவி-ஸ்ருதி இடையே வெடித்த பெரிய பிரச்சனை... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam