கடுமையான இழப்புகளால் தடுமாறும் ரஷ்யா! அம்பலமானது புடின் வகுத்துள்ள பயங்கர திட்டம்
ரஷ்யா முதல் முறையாக பெண் கைதிகளை உக்ரைன் போர் பகுதிக்கு அனுப்பும் என நம்பப்படுவதாக உக்ரேனிய இராணுவம் கூறியுள்ளது.
சமீபத்திய வாரங்களில் ஒரு நாளைக்கு சுமார் 1,000 ரஷ்ய துருப்புக்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து கடுமையான இழப்புகள் காரணமாக, விளாடிமிர் புடின் மனிதவளத்தை நிரப்புவதற்கான மாற்று ஆதாரங்களை நாடியுள்ளார் என்று உக்ரேனிய இராணுவம் மேலும் கூறியுள்ளது.
முன்வரிசையில் பெண்கள்
இதேவேளை கடந்த வாரம் டொனெட்ஸ்க் பகுதியை நோக்கி கைதிகளை ஏற்றிச் செல்வதற்காக ஒதுக்கப்பட்ட இருக்கைகளை கொண்ட புகையிரதம் ஒன்றின் இயக்கம் இருந்தது என தெரியவந்துள்ளது.
இந்நிலையிலேயே ராணுவ வீரர்களின் பற்றாக்குறையை தீர்ப்பதற்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், ரஷ்ய சிறைக் கைதிகளை போர் களத்தின் முன்வரிசைக்கு அனுப்பி வருகிறார்.
இவ்வாறு போரில் களமிறங்குவதற்காக அவர்களின் சிறைத் தண்டனை குறைக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் அதில் தண்டனை பெற்ற பெண் சிறைக் கைதிகள் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் இதற்காக கிரெம்ளின் பெண் குற்றவாளிகள் போர் மண்டலத்திற்கு அருகில் உள்ள கிராஸ்னோடர் பகுதிக்கு மாற்றியதாக நம்பப்படுகிறது.
தடுமாறும் ரஷ்யா
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கைகள் தொடங்கி ஓராண்டை கடந்து இருக்கும் நிலையில், இந்த தாமதம் ரஷ்யாவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
அத்துடன் ஒரு பக்கம் ராணுவ வீரர்களின் அதிகப்படியான உயிரிழப்புகள், மறு பக்கம் தொடர்ந்து அதிகரிக்கும் ஆயுத பற்றாக்குறை போன்றவை ரஷ்யாவை தொடர்ந்து நெருக்கடிக்குள் தள்ளி வருகிறது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

40 வயதுக்கு மேல் திருமணம் செய்துகொண்டது ஏன்?- உண்மையில் எனது வயது 44 இல்லை, நடிகை ஓபன் டாக் Cineulagam

இது ரகசியமாக இருக்கட்டும்... லண்டனில் 12 வயது சிறுமியிடம் அத்துமீறிய தமிழரின் அருவருக்க வைக்கும் பின்னணி News Lankasri
