நாட்டின் எதிர்காலம் அழிவுக்குள்ளே தள்ளப்படுகின்றது : அருட்தந்தை மா.சத்திவேல் கண்டனம்

CID - Sri Lanka Police Sri Lankan Tamils Sri Lanka
By Shan Apr 18, 2024 07:37 AM GMT
Report

தமிழர்களை தொடர்ந்தும் பயங்கரவாதிகள் என அடையாளப்படுத்தி செய்ய முற்படும் அரசியல் நாட்டின் எதிர்காலத்தை மேலும் அழிவுக்குள்ளேயே தள்ளும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் (M.Saththivel) தெரிவித்துள்ளார்.

இவரால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

உயர்ந்த வேகத்திலேயே வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபா

உயர்ந்த வேகத்திலேயே வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபா

நீண்ட விசாரணை

மேலும் தெரிவிக்கையில், 'அரச பயங்கரவாதம் தமிழர் தரப்பில் பேரினவாதத்தின் கைக்கூலிகளாக செயற்பட்டோரை தவிர ஏனைய அனைத்து தமிழர்களையும் தொடர்ந்து பயங்கரவாதிகளாகவே பார்க்கிறது என்பதை எழுத்தாளரும் கவிஞருமான தீபச்செல்வனை அண்மையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அழைத்து நடத்திய நீண்ட விசாரணை மூலம் புலப்படுத்துகின்றது.

future-of-the-country-is-in-downfall-

ஒரு நூல் வெளியீட்டு நிகழ்வினை தலைமை தாங்கியமையை காரணம் காட்டி விசாரணை என அழைத்து குறித்த நூல் புலிகளின் மீளுருவாக்கம் தொடர்பில் கருத்துள்ளனவா? என கேட்டு விசாரணை நடத்தியமை தமிழர் தாயகத்தின் இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் என்போரின் கருத்து சுதந்திரம், எழுத்து சுதந்திரம் என்பவற்றுக்கு எதிரான அச்சுறுத்தல் மட்டுமல்ல அடிப்படை உரிமை மீறலுமாகும்.

இத்தகைய அச்சுறுத்தல் உளவியல் தாக்குதலை வன்மையாக கண்டிப்பதோடு இத்தகைய தாக்குதலுக்கு எதிராக இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் என்போர் ஜனநாயகத்தின் வழியில் எழுதுகோலினை கையில் எடுத்து தமது எதிர்ப்பினை வெளியிடுதல் வேண்டும்.

கருத்து சுதந்திரம்> கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் என்பவற்றை நசுக்குவதற்காக நிகழ்நிலை காப்பு சட்டத்தை நிறைவேற்றியுள்ள ஆட்சியாளர்கள் தமிழக தாயகத்தில் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மூலம் போர்க்கால நிகழ்வுகளை வெளிக் கொண்டு வரும் இலக்கியவாதிகள் எழுத்தாளர்கள் என்பவரை இலக்கு வைத்து அவர்களின் கழுத்தை நெரிக்க முற்படுவது ஜனநாயத்திற்கு எதிரான அராஜகமே.

போர்க்கால அனுபவங்கள், போரின் வலிகள் அதனை சுமந்து நிற்கும் ஒவ்வொருவர் உள்ளத்திலும் தேங்கிக்கிடக்கின்றது.அதனை இலக்கிய வடிவில் வெளியில் கொண்டு வருவதும் அதனை தமது வாழ்வு பயணத்தோடு சேமித்து கடப்பதும் உளவியல் சுகமாகும்.

பயங்கரவாத சிந்தனை

இதனை பயங்கரவாதமாக்குவது பயங்கரவாத சிந்தனை உளவியலாகும். இதுவே பயங்கரவாதம். இத்தகைய பயங்கரவாதத்திற்கு ஆட்சியாளர் முற்றுப்புள்ளி வைத்தல் வேண்டும். இல்லையேல் எதிர்காலம் இன்னும் பயங்கரமாகவே இருக்கும்.

தமிழர்களின் தேசியம் தொடர்பான சிந்தனையை 2009 இனப்படுகொலையோடு முடிவுக்கு வந்துவிட்டோம் என ஆட்சியாளர் நினைக்கும் போது அது ஜனநாயக வடிவில் மீண்டும் மக்கள் மயமாகி உயிர்ப்பு பெற்று வருகின்றது.

தற்போது பேரினவாதத்தின் அடக்குமுறை, ஆக்கிரமிப்பு என்பவற்றை யுத்தமற்ற சூழ்நிலையிலும் நேரடியாக காண்பவர்கள் ஆங்காங்கே ஜனநாயக வடிவில் தமது தேசிய சிந்தனையை மீளுருவாக்கம் செய்து வருகின்றனர். இதற்கு பயங்கரவாதம் சாயம் பூசுவதற்கு எடுத்தாளர்களை விளக்க வைக்கின்றனர்.

future-of-the-country-is-in-downfall-

பேரினவாதிகள் தமிழர்களை தொடர்ந்தும் பயங்கரவாதிகள் என அடையாளப்படுத்தி செய்ய முற்படும் அரசியல் நாட்டின் எதிர்காலத்தை மேலும் அழிவுக்குள்ளேயே தள்ளும்.

அழிவுகளை அரசியலாக்குவது நீடிக்க முடியாது என்பதை தற்போதைய சூழ்நிலை உணர்த்துகின்ற போது அதனை ஏற்றுக் கொள்ளாது வேறு திசையில் மக்களை திருப்பம் அடைவது வெட்கக்கேடு" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலை நடத்தாமல் பதவியில் நீடிக்க ரணில் வியூகமா..! சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி

ஜனாதிபதித் தேர்தலை நடத்தாமல் பதவியில் நீடிக்க ரணில் வியூகமா..! சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி

பொலிஸாரால் நாட்டு மக்களுக்கு புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்

பொலிஸாரால் நாட்டு மக்களுக்கு புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம், மல்லாவி, பிரான்ஸ், France

07 Jun, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US