முடிவுக்கு வரும் பாடசாலை வாழ்க்கை!கேள்விக்குறியாகும் நாட்டின் எதிர்காலம்(Video)
நாட்டின் விலைவாசி அதிகரிப்பு அனைத்து தரப்பினரையும் பாதித்துள்ளது. இதில் பாடசாலை மாணவர்கள் மாத்திரம் விதிவிளக்கல்ல எனும் அளவிற்கு அவர்களின் வாழ்க்கையையும் இந்த பொருளாதார நெருக்கடி கேள்வி குறியாகியுள்ளது.
நாட்டில் பொருட்களின் விலைவாசிகள் கூடுகின்றதே தவிர குறைப்பதற்கான நடவடிக்கைகள் இல்லை என பாடசாலை பொருட்களை விற்பனை செய்யும் கடை உரிமையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பொருட்களின் விலை அதிகரிப்பட்டால் பிள்ளைகளை தொடர்ந்து பாடசாலைக்கு அனுப்புவது கேள்வி குறியாக உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த விலைவாசி அதிகரிப்பிற்கு அரசாங்கமே காரணம். நாட்டு வளங்களை சுரண்டுபவர்கள் சுரண்டிக்கொண்டே போவார்கள். இல்லாதவர்கள் இல்லாமலே போவார்கள். இதை யாரும் கேட்க போவதும் இல்லை மக்கள் பணத்தை எடுத்தவர்களிடமிருந்து யாரும் திருப்பி வாங்குவதும் இல்லை என ஒரு தயார் தெரிவித்துள்ளார்.
விலை அதிகரிப்பு தொடர்பில் பொது மக்களிடம் எமது செய்திசேவை கருத்து கேட்கும் போதே இவர்கள் மேற்கண்டவாறு கூறியுள்ளனர்.
இது தொடர்பில் பலதரப்பினர் எமது செய்திசேவையிடம் கூறிய கருத்துக்களை இந்த காணொளியில் காணலாம்,

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
