சாப்பாட்டு பார்சல்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள திடீர் அதிகரிப்பு
இலங்கையில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதனால் சாப்பாட்டு பார்சல் விலையை மேலும் அதிகரிக்கவுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இடைநிலை வர்த்தகர்கள் காரணமாக இவ்வாறு அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை பாரிய அளவில் அதிகரிப்பதாக சங்கத்தின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதுவரையில் கோதுமை மாவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கோதுமை மா கையிருப்பு உள்ள போதிலும் தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கறுப்பு சந்தையில் கோதுமை மாவிற்கு மேலதிகமாக 2500 ரூபாய் வழங்க நேரிட்டுள்ளது. அரிசி விலை அதிகரிப்பால் பாரிய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
சிகப்பு அரிசி ஒரு கிலோ கிராம் 170 ரூபாயை கடந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து கொண்டு வரும் அரிசிகளில் பெரிதாக சோறு இல்லை.
முன்னர் ஒரு கிலோ கிராம் அரிசியில் 6 பார்சல்கள் செய்ய முடிந்தது. தற்போது அவ்வாறு முடியவில்லை. இதனால் சாப்பாட்டு பார்சல்களின் விலைகளை அதிகரிக்க நேரிடும். 60 முதல் 80 ரூபாய் வரை இருந்த ஒரு காலை உணவு 120 முதல் 150 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
மதிய நேரத்திற்கான சாப்பாட்டு பார்சல் ஒன்று முன்பு 130 முதல் 150 ரூபாய் வரை விற்கப்பட்டது. ஆனால் தற்போது ஒரு பாக்கெட் மதிய உணவு சோறு பார்சல் 260 முதல் 280 ரூபாய் வரை விற்கப்படுகின்றது.
இந்த விலை மேலும் அதிகரிக்கவுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
