வவுனியா ஆடைத்தொழிற்சாலையில் கோவிட் தொற்றாளர்கள் மேலும் அதிகரிப்பு
வவுனியா ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுபவர்களில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்வடைந்துள்ளதாகப் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் எம்.மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள பிரபல ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றுபவர்கள் இரண்டு பேருக்கு இன்று (14.03) கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் 21 பேர் கடந்த சில நாட்களாக கோவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதையடுத்து, அவர்களுடன் தொடர்புடையவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று (14.03)வெளியாகிய நிலையில், 2 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள பிரபல ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் 23 பேர் தற்போது கோவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், குறித்த ஆடைத் தொழிற்சாலையில் 1800 பேர் பணியாற்றும் நிலையில் அவர்களுள் 800 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்,பிராந்திய சுகாதார திணைக்கள பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 2 நாட்கள் முன்
தண்ணீரிலேயே வாழும் நிலைக்கு தள்ளப்பட்ட சிறுவன்: வைரல் வீடியோவை பார்த்து உதவிய அனந்த் அம்பானி Manithan
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் மலர்ந்த காதல் - கேரள பெண்ணை திருமணம் செய்த ஸ்காட்லாந்து எம்.பி News Lankasri