போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு மேலும் விளக்கமறியல் நீடிப்பு
பல்வேறு மதங்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து கடும் விமர்சனத்துக்கு உள்ளான மதப்போதகர் ஜெரோம் பெர்னாண்டோவ எதிர்வரும் டிசம்பர் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்றைதினம் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கடந்த (01.12.2023) ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து கடந்த (01.12.2023) ஆம் திகதி வாக்குமூலத்தைப் பதிவுசெய்வதற்காக வந்த சில மணித்தியாலங்களின் பின்னர் அன்றிலிருந்து அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
08 மணித்தியால வாக்குமூலம்
போதகர் ஜெரோம் பெர்னாண்டோ நவம்பர் 30 ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முதன்முறையாக முன்னிலையாகி சுமார் 08 மணித்தியாலங்களுக்கு வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் கிரிக்கெட் குறித்து கூச்சலிடுவதில் அர்த்தமில்லை: விளையாட்டுத்துறை அமைச்சர் பதிலடி
கடந்த நவம்பர் மாதம் 17ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம், போதகர் ஜெரோம் பெர்னாண்டோ நாட்டிற்கு வந்தவுடன் அவரைக் கைது செய்ய வேண்டாம் என குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டதுடன் அவர் நாட்டிற்கு வந்த 48 மணி நேரத்திற்குள் சிஐடியின் சைபர் கிரைம் புலனாய்வு பிரிவில் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இருப்பினும் வாக்குமூலத்தின் பின் அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 5 நாட்கள் முன்

பாகிஸ்தானை குறிப்பதால் 'மைசூர் பாக்' பெயர் மாற்றம்: இனி இப்படித்தான் அழைக்க வேண்டுமாம் News Lankasri

மில்லில் வேலை பார்த்த தமிழ்நாட்டுக்காரர் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது ஐஏஎஸ் அதிகாரி News Lankasri

இந்தியாவிடம் பின்னடைவு... கடும் நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான் எடுத்துள்ள அந்த முடிவு News Lankasri
