மூன்றாவது நாளாகவும் நல்லடக்கம் செய்யப்பட்டு வரும் ஜனாஸாக்கள்
கோவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களில் கடந்த இரண்டு நாட்களில் இருபது ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், இன்று ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது நாளாகவும் நல்லடக்கம் செய்யப்பட்டு வருகின்றது.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் கோவிட் தொற்று மூலம் மரணித்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்குச் சிபார்சு வழங்கப்பட்டுள்ள நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.
கடந்த இருதினங்களில் கோவிட்டினால் மரணித்தவர்களின் இருபது (20) ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், இன்று மூன்றாவது நாளாகவும் அடக்கம் செய்யப்படும் நடவடிக்கை இடம் பெற்று வருகின்றது.
கோவிட் தொற்று மூலம் மரணித்த ஜனாஸாக்களில் கடந்த வெள்ளிக்கிழமை ஒன்பது ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டதுடன், சனிக்கிழமை 11 ஜனாசாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.
இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 02 மணிவரை நான்கு ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், இன்று மாலையும் ஜனாஸாக்கள் வரவுள்ளதாக கோவிட்டினால் மரணமடையும் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் மையவாடியில் கடமையாற்றும் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் தெரிவித்துள்ளார்.



Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam
