மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு நிதியுதவி (Photos)
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு தேவையான ஒரு தொகுதி அவசர மருத்துவ பொருட்களை மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம்(மெசிடோ) நிதி உதவியுடன் இன்றைய தினம் கையளிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் வேண்டுகோளுக்கு அமைவாக குறித்த மருத்துவப் பொருட்கள் மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தினால் கையளிக்கப்பட்டது.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் வைத்து இன்றைய தினம் மதியம் கையளிக்கப்பட்டது.
மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ குறித்த மருத்துவ பொருட்களை மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளிட்ட வைத்திய குழுவினரிடம் கையளித்தார்.
மன்னார் மாவட்டம் உள்ளடங்களாக வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் பல்வேறு மனிதாபிமான உதவிகளையும் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






