யாழ். மாவட்ட அபிவிருத்திக்காக கிடைக்கப்பெற்ற பெருந்தொகை நிதி
இந்த ஆண்டுக்கான யாழ்ப்பாண மாவட்டத்தின் அபிவிருத்திக்காக 1233.94 மில்லியன் ரூபா நிதி கிடைக்கப் பெற்றுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் வரவேற்பு உரை ஆற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இரண்டாயிரத்து நானூற்று அறுபத்தேழு வேலைத்திட்டங்களுக்கு இந்த நிதி கிடைக்கப்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச பிரிவுகளிலும் இந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
வேலை திட்டங்கள்
அதில் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியாக கிடைக்கப்பெற்ற 322 மில்லியன் ரூபா நிதி உள்ளடங்குகிறது.
ஒட்டுமொத்த நிதிக்கான வேலைத் திட்டங்களும் அந்தந்த பிரதேச செயலர் பிரிவுகளில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |