தமிழக முகாமிலுள்ள ஈழத்தமிழர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்: செல்வராஜா கஜேந்திரன்
தமிழகத்தின் சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களின் கோரிக்கையை நிறைவேற்றத் தமிழக முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்கு இது தொடர்பாகக் கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இதனை கூறியுள்ளார்.

ஈழத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரதம்
தமிழகத்தின் சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருந்து வரும் உடல்நிலை மிகமிக மோசமடைந்துள்ளது.
இந்நிலையில் அவர்கள் முன்வைத்த கோரிக்கைகள் இதுவரையில் நிறைவேற்றப்படாதமை உண்மையில் ஏமாற்றத்தையும் மனவேதனையும் தருகின்றது. இதனை கருத்திற்கொண்டு அவர்களை விடுவிப்பதற்குத் தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் விருப்பத்துக்கு ஏற்ப தாயகம் திரும்புவதற்கோ அல்லது தொடர்ந்தும் தமிழகத்தில் இருப்பதற்கோ உரிய ஏற்பாடுகளைத் தமிழக முதலமைச்சர் செய்ய வேண்டும்.

தமிழக அரசிடம் முன்வைத்துள்ள கோரிக்கை
இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை யுத்தம் காரணமாகவே இங்கிருந்து பலரும் வெளிநாடுகளுக்குச் சென்ற நிலையில், அவ்வாறு வருவார்களுக்கு அடைக்கலம் தருவதாகக்கூறி கொண்டே ஈழத்தமிழர்களைச் சிறப்பு முகாம்களில் அடைத்து வைத்திருப்பது என்பது உண்மையில் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்.
ஆகவே அவர்களை விடுவிப்பதற்குத் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்விடயத்தில் தமிழக முதலமைச்சர்
உடனடியாக தலையிட்டு அவர்களின் கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ரவி மோகன் விவாகரத்து வழக்கு.. மாதம் ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தி, நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam
100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri