வவுனியா அரசாங்க அதிபரின் உத்தரவை மீறி எரிபொருள் விநியோகம்: தடுத்து நிறுத்த கோரிக்கை(Video)
வவுனியா புளியங்குளம் பகுதியில் அமைந்துள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிலையத்தில் அரசாங்க அதிபரின் உத்தரவுகளை மீறி பரல்களில் எரிபொருள் விநியோகம் இடம்பெற்று வருவதாகவும் இந் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துமாறு பொதுமக்கள் பிரதேசசெயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
வவுனியா புளியங்குளம் பகுதியில் அமைந்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சொந்தமான ஐ.ஓ.சி எரிபொருள் நிலையத்தில் எரிபொருள்கள் கடந்த 16ஆம் திகதி இடம்பெற்ற அரசாங்க அதிபரின் கலந்துரையாடலில் பரல்களில் பெட்ரோல் விநியோகம் செய்வதில்லை.
அரசாங்க அதிபரின் உத்தரவு
பெட்ரோல் சேமித்து வைப்பதை தவிர்த்து வரிசைகளில் காத்திருக்கும் பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு முக்கியத்துவம் வழங்குமாறு எரிபொருள் நிலைய உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

எனினும் நேற்றையதினம்(25) குறித்த எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் முடிந்துள்ளதாக தெரிவித்துவிட்டு தனியார் நிறுவனங்கள் சிலவற்றிற்கு பெட்ரோல் விநியோகம் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதையடுத்து இச் சம்பவத்தை சில பொதுமக்கள் வவுனியா வடக்கு பிரதேச செயலாளரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
பிரதேச செயலாளரின் நடவடிக்கை

இந்த விடயம் குறித்து வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் இ.பிரதாபன் கருத்து தெரிவித்தபோது,“மக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அரசாங்க அதிபரின் தீர்மானங்களை மீறி இடம்பெற்ற இச்சம்பவத்தால் அங்குள்ள பலர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் எரிபொருள் சேமித்து வைத்து விநியோகம் செய்வது முற்றாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் முறையிட நடவடிக்கை எடுத்துள்ளோம்”என தெரிவித்துள்ளார்.

குறித்த எரிபொருள் நிலையத்திற்கு அருகே அமைந்துள்ள வவுனியா வடக்கு வலய கல்விப்பணிமனை உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்கள் எரிபொருள் பெற்றுக்கொள்ள பல்வேறு சிரமங்களையும் எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| எரிபொருட்களின் விலை மீண்டும் அதிகரிப்பு |
அடுத்த பிளானில் அறிவுக்கரசி, அழுது புலம்பும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri